1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 மே 2025 (11:36 IST)

தண்டனை குறைச்சிக் குடுங்க ப்ளீஸ்! கோர்ட்டில் கதறி அழுத ஞானசேகரன்! - நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஞானசேகரன் என்பவர் இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டியதுடன், மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் ஞானசேகரனுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று குற்றம்சாட்டப்பட்ட 11 பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என்று உறுதிப்படுத்தி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

 

அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் கதறி அழுத ஞானசேகரன் “எனது தந்தை காலமாகிவிட்டார். எனது தாயார், சகோதரி, மகள் எல்லாரையும் நான்தான் கவனித்துக் கொள்ள வேண்டும், எனக்கு நிறைய கடன்கள் உள்ளது. எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். என் வங்கி கணக்கு முடக்கத்தையும் நீக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

 

ஆனால் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி வாதிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் தண்டனை விவரங்கள் ஜூன் 2ம் தேதி வெளியாகும் என நீதிமன்றம் தெரிவித்து இந்த வழக்கு தண்டனை தேதியை அறிவித்துள்ளது. அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை ஞானசேகரனுக்கு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

Edit by Prasanth.K