1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 28 மே 2025 (11:21 IST)

பவன் கல்யாண், விஜய், சரத்..Etc, திமுகவுக்கு எதிராக வலுசேர்க்கும் நயினார்? - பாஜக ஸ்கெட்ச்!

Vijay Pawan Kalyan

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் திரைப்பிரபலங்கள் பலரும் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக தீவிரமாக செயலாற்றத் தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் தொடங்கி,  கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முன் தயாரிப்பு, கட்சி தொண்டர்களை களப்பணிகளில் ஈடுபடுத்துதல் வரை அனைத்து தரப்பு வேலைகளிலும் மும்முரம் காட்டி வருகின்றது. 

 

திமுகவை வீழ்த்த தமிழக பாஜக பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்துள்ள நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அமமுக, அதிமுக உமீகு உள்ளிட்டவையும் அதே கூட்டணியில் உள்ளன. தேமுதிக, பாமக கட்சிகள் கூட்டணியை முடிவு செய்யவில்லை.

 

இந்நிலையில்தான் சமீபத்தில் பேசிய பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் திமுகவை வீழ்த்த அனைவரும் சேர்ந்து செயல்படவேண்டும் என மறைமுகமாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார். ஆனால் விஜய் இந்த கூட்டணியில் சேர்வாரா என்பது சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது. தங்களது தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என தவெக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

 

அதேசமயம், ஆந்திராவில் வலுவாக உள்ள துணை முதல்வர், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சமீபமாக தமிழகத்தில் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பவன் கல்யாண், தமிழ்நாட்டில் பாஜக வெற்றிக்காக தான் செயல்பட தயார் எனவும், நயினார் நாகேந்திரன் அழைத்தால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றும் பேசியிருந்தார்.

 

இந்த தொடர் சம்பவங்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக பாஜக கூட்டணியில் பெரும் நடிகர் பட்டாளத்தை சேர்ப்பதற்கு நயினார் நாகேந்திரனிடம் திட்டம் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய், பவன் கல்யாண், சரத்குமார் என எதிரணியில் சேரும் நட்சத்திர மதிப்பு தேர்தலில் திமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணியாக அமைய வாய்ப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K