1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (15:21 IST)

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்

 

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணியை அறிவித்து தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தரப்பினரும் மழுப்பலாக பேசி வரும் நிலையில், அதிமுகவினரோ எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என கூறி வருவது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் “தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். அவரது தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தலுக்கு பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்து அவர்கள் பேசி முடிவு செய்வார்கள்” என பேசினார். ஆனால் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அவர் முதலில் கூறவில்லை.

 

பின்னர் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது “நான் தெளிவாக பதில் சொல்லிவிட்ட பிறகும் மீண்டும் கேட்கிறீர்கள். தமிழகத்தின் பெரிய கட்சி எது? அதிமுக. யார் தலைமையில் கூட்டணி? எடப்பாடி பழனிசாமி தலைமையில்..” என்று கூறினார். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விக்கு சுருக்கமாக ஆமாம் என்று பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.

 

Edit by Prasanth.K