1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 14 ஏப்ரல் 2025 (10:11 IST)

நமது கொள்கை தலைவர் அம்பேத்கர் பிறந்த நாள்.. தவெக விஜய் மரியாதை..!

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று அக்கட்சியின் தலைவர் விஜய், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன்பின் இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
 
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
 
சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்.
 
அண்ணல் அம்பேத்கர் சிலை அருகே செல்லும்போது கார் அருகே காலணியை கழட்டிவிட்டு வெறு காலுடன் சென்று மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார் விஜய். மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் போல் எந்தவித பந்தாவும் இன்றி அவரே மலர்களை கையில் எடுத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran