எனது மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.8 மட்டுமே உள்ளது.. ஜெயவர்தன் .. மினிமம் பேலன்ஸ் கூட இல்லையா?
தென்சென்னை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தனது மனைவியின் வங்கி கணக்கில் வெறும் 8 ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறியிருப்பதை அடுத்து மினிமம் பேலன்ஸ் கூட இல்லையா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அதிமுக சார்பில் ஜெயவர்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் 4 ஆம் தேதி இந்த தொகுதியின் எம்பி யார் என்பது தெரியவரும்
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தனது மனைவியின் வங்கி கணக்கில் 8 ரூபாய் மட்டுமே இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது பெயரிலும் மகன் மனைவி பெயரிலும் சுமார் 86 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் 12 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தனது 3 கோடியே 99 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவர் தனது மனைவியின் வங்கி கணக்கில் எட்டு ரூபாய் மட்டுமே இருப்பதை அடுத்து மினிமம் பேலன்ஸ் கூட இல்லையா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
Edited by Siva