திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (11:47 IST)

சீமான் அறிவித்த முதல் வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்.. நாம் தமிழர் கட்சி அதிர்ச்சி..!

Seeman
நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளராக சீமான் அறிவித்த வேட்பாளர் இன்று திடீரென எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டே ஒருசில  பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை அறிவித்து விட்டார் என்பது தெரிந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளராக சீமானால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டவர் பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படம் இயக்குனர் நாச்சியார் சுகந்தி என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வேட்பாளர் நாச்சியார் சுகந்தி தனது தேர்தல் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று அதிமுகவில் சேர்ந்து கொண்டார். எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்ட அவர் இனி அதிமுகவுக்காக பணி செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்

நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் நாச்சியார் சுகந்தி திடீரென அதிமுகவில் இணைந்தது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும்.

Edited by Mahendran