1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 மே 2025 (10:59 IST)

வெங்காயம் விலை படுவீழ்ச்சி.. ஒரு கிலோ ரூ.10 என விற்பனையாவதால் விவசாயிகள் கவலை..!

கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மொத்த விலையில் ஒரு கிலோ ருபாய் 10 மட்டுமே விற்பனையாகி வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கடந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இறங்கி நேற்று கிலோ 10 ரூபாய் என வீழ்ச்சி அடைந்துள்ளது.
 
கோயம்பேடு சந்தைக்கு வெங்காயத்தின் வரத்து அதிகமாக இருப்பதால் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும் அறுவடை பருவமும் முடிந்துள்ளதாகவும் அதனால் பெரிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதாகவும் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு ஓரளவு விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்த பொதுமக்கள் அதிகமாக வெங்காயத்தை வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்றும் ஆனால் அதே நேரத்தில் வெங்காயத்தை பயிரிட்ட விவசாயிகள் பெரும் கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சாம்பார் வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய் என விற்பனையாகி வரும் நிலையில் சில்லறை விலையில் பெரிய வெங்காயம் 15 ரூபாய் மட்டுமே விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran