செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் வழி மாற்றம்: முக்கிய அறிவிப்பு..!
செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு புறவழி சாலை வழியாக கிளாம்பாக்கம் செல்லும் என்றும் வடபழனி தாம்பரம் பெருங்களத்தூர் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11 வரை செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு நசரத்பேட்டை புறவழி சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தேதிகளில் வடபழனி முதல் தாம்பரம், பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவுப்படி ஆம்னி பேருந்துகளை இயக்கப்பட மாட்டாது. எனவே பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏறி செல்லலாம்.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதி உடன் வழக்கம் போல் செயல்படும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Edited by Siva