வடகிழக்குப் பருவமழை தொடக்கம்! நாளை முதல் தீபாவளி வரை மழை பெய்யும்: வியாபாரிகள் சோகம்..!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தென்மேற்கு பருவமழை அடுத்த இரு நாட்களில் விலகும் நிலையில், அக்டோபர் 16-ஆம் தேதி வாக்கில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று மற்றும் அடுத்த சில நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் மிதமான மழை நீடிக்கும்.
இன்று, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்படப் பல தென் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், நாளை முதல் அதாவது அக்டோபர் 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை தொடரும்.
வரும் 19-ஆம் தேதி மற்றும் தீபாவளி தினமான 20ஆம் தேதிஅரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். எனவே தீபாவளி வரை மழை தொடரும்.
Edited by Mahendran