வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 நவம்பர் 2024 (13:07 IST)

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

Mk Stalin Edappadi

பயன்படாத திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைத்து கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் 2021ல் திமுக ஆட்சி அமைத்த நிலையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்கப்படுகிறது. சமீபத்தில் இதை விமர்சித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு பயன்படும் திட்டங்களை விட்டுவிட்டு, கலைஞர் பெயரில் பயன்படாத பல திட்டங்களை அறிவித்து கோடிக் கணக்கில் நிதி ஒதுக்குவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இன்று விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “பொய் பேசலாம் ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது என்பார்கள். அதை மாற்றி பொய் பேசலாம் ஆனால் பழனிசாமி மாதிரி பேசக்கூடாது என்று வைக்க வேண்டும். மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைத்து நிதி ஒதுக்குவதாக அவர் சொன்ன செய்தியை கேட்டதும் எனக்கு சிரிப்புதான் வந்தது. திமுக அரசு செயல்படுத்தியதில் எந்த திட்டம் மக்களுக்கு பயன்படாத திட்டம் என எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா?

 

தமிழினத்திற்காக 80 ஆண்டுகள் ஓயாமல் உழைத்த கலைஞரின் பெயரை மக்கள் நலத் திட்டங்களுக்கு வைக்காமல் வேறு யார் பெயரை வைப்பது? பதவி சுகத்திற்காக கரப்பான் பூச்சி மாதிரி ஊர்ந்து சென்றீர்களே.. உங்கள் பெயரை வைக்க முடியுமா?” என காட்டமாக விமர்சித்து பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K