வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 அக்டோபர் 2024 (07:39 IST)

தீபாவளிக்கு ‘அமரன்’ படம் கண்டுகளித்த முதல்வர், துணை முதல்வர்! - படக்குழுவினருக்கு வாழ்த்து!

Amaran special show

தீபாவளியான இன்று சிவகார்த்திகேயனின் ’அமரன்’ படம் வெளியாகும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு படம் சிறப்பு திரையிடல் நடத்தப்பட்டது.

 

 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை குறித்த பயோபிக் படமான இதில் சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

இந்த படம் தீபாவளியான இன்று திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் பல திரையரங்குகளிலும் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது. இன்று அமரன் திரைப்படம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
 

 

இந்த சிறப்பு திரையிடலில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர். படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு, படம் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K