1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 மே 2025 (12:55 IST)

அமைச்சர் ரகுபதியின் துறை துரைமுருகனுக்கு..! அமைச்சரவை இலாகா திடீர் மாற்றம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகாக்கள் திடீரென மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6 முறை அமைச்சரவை இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் சட்டமன்ற உறுப்பினராக மட்டும் இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு பின்னர் இலாகா மாற்றத்தின்போது விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது. 

 

அதுபோல பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ராஜக்கண்ணப்பன் உள்ளிட்ட பல அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டது.

 

அந்த வகையில் தற்போது தமிழக சட்டத்துறையை கவனித்து வந்த அமைச்சர் ரகுபதி கனிமவளத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதனால் அவர் வகித்து வந்த சட்டத்துறை பொறுப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், சட்டத்துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K