திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (09:24 IST)

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை; முதலமைச்சருக்கு மாணவர்கள் கடிதம்!

Kalashetra
சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட தேசிய மகளிர் ஆணைய குழு பாலியல் துன்புறுத்தல் எதுவும் நடைபெறவில்லை என அறிக்கை அளித்தது. இதற்கு மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரி வளாகத்திலேயே அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏப்ரல் 6ம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

ஆனாலும் மாணவிகள் போராட்டத்தை கைவிடாமல் நள்ளிரவு 2 மணி வரை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தற்போது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர் உட்பட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவ, மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

Edit by Prasanth.K