திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:46 IST)

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Jallikattu
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மதுரை பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் பெயர்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று பகல் 12 மணி முதல் ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva