திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:25 IST)

ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம்: ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு முடிவு

ஏப்ரல் 11ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது குறித்து ஜாக்டோ ஜியோ உயர் மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியம் வாங்குவதாகவும் எனவேதான் அவுட்டோர்ஸிஞ் முறையை முன்னெடுப்பதற்கு முன்மொழிவதாக தமிழக முதல்வர் முன்னிலையில் நிதி அமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் பேசியது கண்டிக்கத்தக்கது என்ன ஜாக்டோ ஜியோ மற்றும் குழு கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஏப்ரல் 7 முதல் 9 வரை அந்தந்த மாவட்ட எம்பி எம்எல்ஏக்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
 
இதனையடுத்து ஏப்ரல் முற்றுகையிடும் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்களை இயற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva