இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ராமேஸ்வரம், விருத்தாச்சலம், சீர்காழி, கடலூர், திருப்பூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 சென்டிமீட்டர் முதல் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தின் சில இடங்களில் மே 11ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும், மாலை நேரத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran