திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (15:40 IST)

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தை வேடிக்கை பார்க்க, ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தை வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி, வெள்ளம் ஓடும் பகுதிக்கு அருகே சென்று செல்பி எடுத்து வருவதாகவும், ஆபத்தான பகுதியில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முன்பெல்லாம் வெள்ள அபாய எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெள்ளத்தில் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஏராளமானோர் வெள்ளப்பெருக்கை காண்பதற்காக சுலக்சனா முதலியார் மேம்பாலத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், சிலர் ஆபத்தான முறையில் செல்பி எடுப்பதாகவும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோரத்தில் நின்று யாரும் வேடிக்கை பார்க்க வேண்டாம் என்றும், ஆற்றின் கரையோரத்தில் செல்பி எடுக்கவோ புகைப்படம், வீடியோ எடுக்கவோ வேண்டாம் என்றும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

வெள்ளப்பெருக்கு அதிகரித்தால் ஆபத்தான நிலை ஏற்படும் என்பதால், "கலைந்து செல்லுங்கள்" என்று ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.


Edited by Mahendran