காவலரே மதுபாட்டில்களை கடத்திய அதிர்ச்சி சம்பவம்.. உடனடியாக சஸ்பெண்ட்...
திருவாரூரில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை கடத்த உதவியதாக கூறி, தலைமை காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் அமலாக்கப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார் ஒன்றில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடத்தலில் ஈடுபட்ட காரை சோதனையிட்டதில், பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வரும் கார்த்திகேயன் மற்றும் அவருடன் இருந்த மற்ற இருவர் பிடிபட்டனர்.
காவல்துறை அதிகாரி ஒருவரே மது பாட்டில்களை கடத்திய செயலில் ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தலைமை காவலர் கார்த்திகேயன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
காவல்துறையை சேர்ந்த ஒருவரே சட்டவிரோத செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் விமர்சனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva

