மயங்கி விழுந்தது விஜயபாஸ்கரின் காளை: புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் பரபரப்பு..!
புதுக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கரின் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் மிகவும் பிரபலம் என்பதும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உள்பட பல ஜல்லிக்கட்டுகளில் இந்த காளை கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை கலந்து கொண்டதை அடுத்து அந்த காளை வாடிவாசலில் இருந்து வெளியே வரும்போது திடீரென கட்டையில் மோதி மயங்கி விழுந்தது.
இதனால் புதுக்கோட்டை வடசேரிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது விஜய் பாஸ்கரின் காளை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அந்த காளை தற்போது கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.