திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (21:51 IST)

கரூர் மாநகரில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

admk
கரூர் மாநகர் வடக்கு பகுதி கழகத்தின் சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 05, 06, 10 வது வார்டு பகுதிக்குட்பட்ட பூத் கமிட்டி கூட்ட ஆலோசனை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமெடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாநகர் வடக்கு பகுதி கழக செயலாளர் அண்ணமார் தங்கவேல் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  மாண்புமிகு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் ம. சின்னசாமி அவர்கள் தலைமை தாங்கி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனைகளை வழங்கி உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை கழக நிர்வாகிகளிடம் வழங்கினார்.  
 
இந்நிகழ்ச்சியில் கரூர் மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல், கரூர் வடக்கு பகுதி பொறுப்பாளர்கள் ஆர்.கே.கவின்ராஜ், பழமண்டி சுப்பிரமணி, நவலடி கார்த்தி, கரூர் வடக்கு பகுதி 05 வது வார்டு செயலாளர் குழந்தைவேல், 06 வது வார்டு செயலாளர் சக்திவேல், 10 வது வார்டு செயலாளர் நவேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.