திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:05 IST)

சென்னையில் வெள்ளம்: Hyundai நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண உதவி

Chennai Rain
மிக்ஜாம் புயல் மற்றும் சென்னை வரலாற்றில் கடந்த 47 ஆண்டுகளில்  இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தெரிவித்து, இடைக்கால நிதியுதவி கோரும் கோரிக்கை மனுவியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த  நிலையில், சென்னையிலுள்ள மணலி பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் பற்றி  அமைச்சர் நேரு, எம்.எல்.ஏ சுதர்சனம்  உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

சென்னை புயல் பாதிப்பு நிராண நிதியாக  பலரும் உதவி செய்து வரும் நிலையில், பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான hyundai- ஹூண்டாய்  மோட்டார் இந்தியா மிக்ஜாம் புயல்  நிவாரண பணிகளுக்கு  ரூ. 3 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.