திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 டிசம்பர் 2024 (10:22 IST)

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு: மருத்துவமனை வட்டாரத்தில் தகவல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில் அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இளங்கோவனுக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், அவரது உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
 
சென்னை மியாட் மருத்துவமனையில், ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென நேற்று இரவு இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran