1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. election commission says no survey

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

mk stalin
தமிழக மட்டுமில்லாமல் கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை வருகிற 23ம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பல தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்..

ஒருபக்கம் தேர்தல் வந்துவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வெளியாகும்.. பல அமைப்புகளும் கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறார்கள். அதில் பெரும்பாலும் திமுக ஆட்சியை பிடிக்கும் எனவும் இரண்டாம் இடத்திற்கு அதிமுக வரும் எனவும் மூன்றாம் இடத்தில் தவெக இருக்கும் என சொல்லுகிறார்கள்..

குறிப்பாக விஜயின் தவெக 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கும் எனவும், 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் சில கருத்துக்கணிப்புகள் சொன்னது. இந்நிலையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 9ம் தேதி முதல் 29ம் தேதி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...