திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (09:01 IST)

கண்ணியத்தோடு பேச வேண்டும்: சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடிந்துகொண்ட துரைமுருகன்..!

duraimurugan
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல திமுகவில் உள்ள அனைத்து பேச்சாளர்களும் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்று ஒரு பொதுச் செயலாளராக உத்தரவிடுகிறேன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டிப்பாக கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எதிர்க்கட்சியினரை தகாத வார்த்தைகளில் பேசி வருவது  சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறதுஜ். அருவருக்கத்தக்க  வகையில் உருவ கேலி செய்வது போன்றவை மீண்டும் நான் தொடர்ந்து வருவதை அடுத்து துரைமுருகன் இது குறித்து காட்டமாக கூறியுள்ளார்

துரைமுருகன் முன்னிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து மைக்கை பிடுங்கிய துரைமுருகன், ’நம்முடைய கொள்கைகளை பற்றி தான் பேச வேண்டுமே தவிர இன்னொருவரை இழித்தும், பழித்தும் பேசுவது அழகு அல்ல, இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், உங்களுக்கு மட்டுமல்ல திமுகவில் உள்ள அனைத்து பேச்சாளர்களுக்கும் இதை ஒரு எச்சரிக்கையாக கூறுகிறேன் என்று கூறினார்

மேலும் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும் பேசுகிறபோது நம்முடைய கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டுமே தவிர வார்த்தைகள் தடிப்பாக இருக்கக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

Edited by Siva