இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்
வேள்பாரி புத்தக விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் பேச்சுக்கு தான் நன்றி தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேள்பாரி புத்தக விழாவில் பேசிய ரஜினிகாந்த், "ஏ.வ.வேலு அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் தி.மு.க.வில் ஓல்ட் ஸ்டூடண்ட்ஸை சமாளிப்பது கஷ்டம் என்று பேசியிருந்தேன். அதற்கு கிடைத்த கைதட்டலில் ஆனாலும், ஓல்ட் ஸ்டூடண்ட்ஸ் தான் ஒரு இயக்கத்தின் தூண், சிகரம். அவர்களுடைய அனுபவம் தான் பெரிய பலம் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்" என்று நகைச்சுவையாக பேசியிருந்தார்.
இது குறித்து அமைச்சர் துரைமுருகனிடம் கேட்கப்பட்டபோது, "ரஜினியிடம் போனில் பேசினேன், 'ரொம்ப தேங்க்ஸ்' என்று சொன்னேன். 'இப்போவாச்சும் மறக்காமல் பேசினீர்களே' என்று நகைச்சுவையாக சொன்னேன்" என்று தெரிவித்தார்.
மேலும், விஜய்யின் பேச்சு குறித்த கேள்விக்குப் பதிலளித்த துரைமுருகன், "எங்களை கேள்வி கேட்கக்கூட விஜய் வரமாட்டார். எங்களை ஒழிக்க நினைத்தால் அவரால் சட்டசபைக்கு கூட வர முடியாது" என்று கூறினார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva