1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 15 ஜூலை 2025 (18:50 IST)

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன், அடுத்ததாக மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், அதன் ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கிவிட்டதாகவும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையைச் சமீபத்தில் ரஜினியை சந்தித்தபோது நிதிலன் சாமிநாதன் அவரிடம் கூறியதாகவும், அந்த கதை தனக்குப் பிடித்துவிட்டதால் இந்த படத்தில் தானே நடிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால், நிதிலன் சாமிநாதன் தரப்பில் இந்த செய்தியை மறுத்துள்ளனர்.
 
ரஜினியை சந்தித்தது மரியாதை நிமித்தம் காரணமாகத்தான் என்றும், அவரிடம் கதை எதுவும் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில், "தனக்கு ஏற்ற கதை ஒன்று இருந்தால் கூறுங்கள்" என்றுதான் ரஜினிகாந்த் கூறியிருந்தார் என்றும், எனவே விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினியிடமும் கூறியதாக வெளிவந்திருக்கும் தகவல் தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva