சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை: சாலைகளில் மழைநீர்..!
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் தற்போதும் பல இடங்களில் மழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்றும் இதனால் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு ஆரம்பித்த மழை விட்டு விட்டு விடிய விடிய பெய்து வந்ததால் சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி உள்ளதாகவும் சில இடங்களில் கன மழை பதிவாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணிக்கு மேல் அதிக கன மழை பெய்து வருவதாக தெரிகிறது. மேலும் சராசரியாக சென்னையில் 53 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சியிலிருந்து வெளிவந்திருக்கும் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது
Edited by Siva