1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 மே 2025 (13:46 IST)

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

Rain

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் அதை உணர முடியாதபடிக்கு மழை குளிர்வித்து வருகிறது. ஒருபக்கம் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

அந்த வகையில் இன்றும் நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை (மே 16) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கொளுத்தும் கோடை வெயிலில் ஆங்காங்கே மழை பெய்து குளிர்விப்பது மக்களை மகிழ்ச்சியில ஆழ்த்தியுள்ள நிலையில் மே 17 மற்றும் 18ம் தேதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K