திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 6 ஜனவரி 2024 (15:34 IST)

பூரி சங்கராச்சாரியாரை கண்டிக்க பா.ஜகவுக்கு தைரியம் உள்ளதா? அமைச்சர் மனோதங்கராஜ்

Puri Shankaracharya Nissalantha Saraswati
ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வதை நான் கைதட்ட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பி பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி பேட்டியளித்திருந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோதங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு எனத் தனியாக அறக்கட்டளை தொடங்கப்பட்டு நிதி சேகரிக்கப்பட்டு கோவில் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட்டு  நிறைவடைந்துள்ளது.

ஜனவரியில் கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், விவிஐபிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த    நிலையில்,  அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின்  அறிவுரையின்படி, கும்பாபிஷேகப் பெருவிழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், இவ்விழா அழைப்பிதழில் பிரதமர் நரேந்திரமோடி, ராஷ்டிரிய சேவா சங்- ஸ்ரீ மோகன் பகவத் ஜி,  குஜராத் கவர்னர் ஆனந்தி பென் படேல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத்  உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ராமர் கோயிலில் பிரதமர் மோடி சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வதை நான் கைதட்ட வேண்டுமா? ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்வது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். அப்படி நடக்காத நிகழ்ச்சிக்கு செல்ல  மாட்டேன் என்று பூரி சங்கராச்சாரியார் நிஸ்சாலந்தா சரஸ்வதி பேட்டியளித்திருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தமிழக அமைச்சர் மனோதங்கராஜ்,

’’சனாதன சாதிய கட்டமைப்பிற்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தும் எங்களை  கேள்வி கேட்கும் பா.ஜகவினர் இப்போ எங்கே? பூரி சங்கராச்சாரியாரை கண்டிக்க பா.ஜகவுக்கு தைரியம் உள்ளதா?

“பிரதமர் மோடி ராமர் சிலையை தொடுவதை என்னால் பார்க்க முடியாது. அவர் அதை தொடக்கூடாது புரோகிதர் தான் தொட வேண்டும்,அவர் தொடுவதாக அறிவித்துள்ளதால்  நான் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்” என பூரி சங்கராச்சாரியார் அறிவிப்பு. இதேதான்  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் திரௌபதி முர்முவுக்கும் நடந்தது.’’என்று தெரிவித்துள்ளார்.