வெள்ளி, 21 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 9 நவம்பர் 2025 (10:33 IST)

வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆள் மாறாட்டம் செய்யும் திமுகவினர்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆள் மாறாட்டம் செய்யும் திமுகவினர்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் (SIR) தொடர்பாக ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.
 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "திமுக-வுக்கு சொந்தமான அதிகாரிகள், SIR-ஐ எதிர்ப்பது போல பாசாங்கு செய்து, வீடு வீடாக சென்று திருத்த பணிகளை செய்கின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு, திமுக பிரமுகர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக ஆள்மாறாட்டம் செய்து, அதிமுக ஆதரவு வாக்குகளை நீக்க சதி செய்வதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
 
இந்த SIR செயல்முறையை எதிர்த்து திமுக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த திருத்தமே சிறுபான்மையினர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்குவதற்காக செய்யப்படும் சதி என்று திமுக திருப்பி குற்றம் சாட்டியுள்ளது.
 
வாக்காளர் திருத்தத்தை சுற்றியுள்ள இந்தச் சர்ச்சை, எதிர்வரும் தேர்தலுக்கான இரண்டு திராவிடக் கட்சிகளின் மோதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

Edited by Mahendran