செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (17:59 IST)

தமிழக பெண்கள் vs வட இந்திய பெண்கள்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

தமிழக பெண்கள் vs வட இந்திய பெண்கள்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!
தமிழகத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தமிழகப் பெண்கள், வட இந்திய பெண்கள் இடையே உள்ள வித்தியாசங்களை குறித்து பேசியது  சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 
 
தமிழகத்தில் ஒரு பெண்ணாக இருப்பதற்கும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒரு பெண்ணாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பெண்கள் மனிதர்களாகக்கூட கருதப்படவில்லை. வட இந்தியாவில் இப்போதும் அதே நிலைதான் நீடிக்கிறது. வட இந்தியாவில் நாம் ஒரு பெண்ணை சந்தித்தால், அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, உங்கள் கணவர் எங்கே வேலை செய்கிறார்? என்பதுதான். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு பெண்ணிடம் கேட்கப்படும் கேள்வி, நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்? என்பது. இந்த மாற்றம் ஒரே இரவில் வந்துவிடவில்லை. தமிழ்நாட்டில் இதற்கு ஒரு நூற்றாண்டு கால உழைப்பு தேவைப்பட்டது," என்றார்.
 
இந்த கருத்துக்கள் பல அரசியல் தலைவர்களின் கடும் விமர்சனத்தைப் பெற்றன. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, தனது 'X' சமூக வலைத்தளத்தில், "மீண்டும் ஒருமுறை திமுக வரம்பு மீறிவிட்டது. உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் வட இந்தியாவை அவமானப்படுத்துகிறது," என்று கூறியுள்ளார்,

Edited by Mahendran