திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 பிப்ரவரி 2024 (11:12 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அல்வா கொடுத்த திமுகவினர்.. இதுதான் காரணம்..!

கிளாம்பாக்கம் மக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வு மிகவும் குறைந்ததாக இருக்கிறது என்றும் தமிழகத்தில் இருந்து அளிக்கும் வருமானத்தில் பெரும் அளவு மத்திய அரசு எடுத்துக் கொண்டு சிறிய அளவே நம் மாநிலத்திற்கு தந்து கொண்டிருக்கிறது என்றும் மத்திய அரசு மாநில அரசை வஞ்சிக்கிறது என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இது குறித்து சமீபத்தில் திமுக எம்பிக்கள் டி ஆர் பாலு, ஆ ராசா  நாடாளுமன்றத்தில் பேசியதையும் பார்த்தோம். இந்த நிலையில் மத்திய அரசு அளிக்கும் நிதி பகிர்வை உணர்த்தும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் அல்வா கொடுத்து மத்திய அரசு வஞ்சிப்பதை மக்களிடம் விளக்கி கூறியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran