திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (13:58 IST)

ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கச் சாலை விரிசல், தண்ணீர் தேக்கம்

Pragati Maidan tunnel
ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட டெல்லி பிரகதி மைதான சுரங்கச் சாலை 2 ஆண்டிற்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,   கடந்த 2022 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை.

டெல்லி பிரகதி மைதான் சுரங்கச் சாலை ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட நிலையில்,  2 ஆண்டுக்குள் விரிசல் விழுந்து, தண்ணீர் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கழிவு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த சுரங்கச் சாலையை பழுதுபார்ப்பது சாத்தியமில்லை என்றும், இதை  முற்றிலும், சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.