வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கோடைக்காலத்திலேயே பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. கனகபுரா, ஓசூர், தேன்கனிக்கோட்டை, பிலிகுண்டுலு உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போஒது வேகமாக உயர்ந்து விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K