டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா
அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி வரிக்கு எதிராக, மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க கோரி, திருப்பூரில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கலந்துகொண்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ. ராசா "நரேந்திர மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்று கொண்டிருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்கி கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா, இந்திய தயாரிப்புகளுக்கு 50% வரி விதித்ததற்கு டிரம்ப் காரணம் அல்ல என்றும், இந்த வரியை விதிக்க சொன்னதே பிரதமர் மோடிதான் என்றும் ஆ. ராசா குற்றம் சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஆ. ராசாவின் பேச்சு, திருப்பூரின் வர்த்தகத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
Edited by Mahendran