தொடர்புடைய செய்திகள்
- வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றால் வன்முறைக்கு வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்!
- ஜீயர் அயோக்கியத்தனமான காரியத்தில் ஈடுபடுகிறார்: நாஞ்சில் சம்பத் காட்டம்!
- வடை போச்சே! - காத்து வாங்கும் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டம்
- ஜீயர் உண்ணாவிரதம், வைரமுத்துவை கண்டித்து எஸ்.வி சேகர் டுவீட்!
- வைரமுத்துவை கண்டித்து ஜீயர் நாளை முதல் உண்ணாவிரதம்!
அட்ரா சக்கை! - ஜீயருக்கு எதிராக உண்ணும் விரதப் போராட்டம்
ஆண்டாள் சர்ச்சையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜீயருக்கு எதிராக திராவிடக் கழகத்தினர் களம் இறங்கியுள்ளனர்.
ஆண்டாள் குறித்து தனது கட்டுரையில் கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய விஷயம் தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பெரும் சர்ச்சையை எழுப்பியது. அவருக்கு எதிராக இந்து அமைப்புகள் வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் குதித்து போராட்டம் நடத்தியது.
இதனையடுத்து வைரமுத்து தனது கருத்து தவறாக திரிக்கப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜீயர் சடகோப ராமானுஜம் பிடிவாதமாக தனது இரண்டாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், ஜீயருக்கு எதிராக, கோவையில் பெரியார் திராவிடக் கழகத்தினர் உண்ணும் விரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். அதேபோல், இந்த விவகாரத்தில் வைரமுத்துவை தவறாக விமர்சித்த ஹெச்.ராஜாவை கண்டித்து, ஆண்டாள் கோவில் அருகில் வருகிற 12ம் தேதி உண்ணும் போராட்டத்தை நடத்துவதற்கு அகில இந்திய பார்வார்ட் பிளாக் கட்சி போலீசாரிடடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது.
