வியாழன், 14 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: புதன், 6 ஆகஸ்ட் 2025 (12:33 IST)

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

Food delivery boys

திமுக ஆட்சி காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் டெலிவரி ஊழியர்களுக்கு ஸ்கூட்டர் வாங்க மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள், தினசரி பயன்பாட்டு பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த டெலிவரி நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகின்றனர். 

 

சமீபத்தில் சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக பல பகுதிகளில் ஏசி, மொபைல் சார்ஜ் செய்யும் வசதிகளுடன் கூடிய தங்கும் அறைகள் அமைக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.

 

அதை தொடர்ந்து தற்போது டெலிவரி ஊழியர்கள் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏற்கனவே தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டெலிவரி ஊழியர்கள் வாங்கும் இ-ஸ்கூட்டருக்கு ரூ.20 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K