திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மே 2023 (21:03 IST)

மகாத்மா காந்தியின் பேரன் மறைவு- முதல்வர் இரங்கல்

arun Gandhi
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 2 வது மகன் மணிலால். இவருக்கும் சுசிலா என்ற பெண்மணிக்கும் கடந்த 1934 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் அருண்காந்தி.

இவர் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள வீட்டில் வசித்து வந்த  நிலையில், சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வயது மூப்பின் காரணமாக அருண்காந்தி காலமானார். அவருக்கு வய்து 89 ஆகும். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று மாலை கோலாப்பூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

இந்த நிலையில், "தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பெயரனும் எழுத்தாளருமான திரு. அருண் காந்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் முக,ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.