ஞானசேகரனுக்கு தண்டனை கிடைக்கலாம்.. ஆனால் அந்த மாணவியின் நிலைமை: குஷ்புவின் பதிவு..!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அவருக்கான தண்டனை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும், ஞானசேகருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குரல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நடிகையும் பாஜக பிரபலமானவருமான குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் இந்த தீர்ப்பு குறித்து பதிவு செய்துள்ளார்: "ஞானசேகரன் தனது குற்றத்திற்காக தண்டிக்கப்படுகிறார். இப்படியான தீர்ப்புகளை காணும் போது ஒரு நிம்மதியான உணர்வு ஏற்படுகிறது. ஆனால், ஒரு பெண் தாக்கப்படுகிறார் என்றால், அது அவரது உடலுக்கு மட்டுமல்ல, ஆன்மாவும் பாதிக்கப்படுகிறது. அவரது வாழ்க்கை முழுவதும் ஒரு நீங்காத மாசு ஏற்படும். காலங்கள் காயங்களை ஆற்றலாம் ஆனால், அந்த பீதிகாரமான நினைவுகள் என்றும் அவர் மனதில் இருந்து கொண்டே இருக்கும்."
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நிகழ்ந்த கடுமையான பாலியல் தாக்குதலுக்கு நீதியும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தைகளின் தாயாக இருக்கும் எனக்கு, இந்த தாக்குதலுக்கான தீர்ப்பு ஒரு நியாயமான தண்டனையாக தோன்றுகிறது என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Mahendran