1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 மே 2025 (16:58 IST)

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலனை! - தமிழக அரசு விளக்கம்!

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பாதுகாப்பு வழங்க பரிசீலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், கிரானைட் ஊழல்களை கண்டுபிடித்து அம்பலப்படுத்தியதுடன், பல மலைகள் குவாரிகளால் அழிந்து போவதிலிருந்தும் தடுத்தார். கிரானைட் வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

 

அந்த வழக்கு விசாரணையில் சகாயம் ஆஜராகாத நிலையில், அவர் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் வர இயலவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த விஷயம் பெரும் பரபரப்பாக மாறிய நிலையில், சகாயத்திற்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு “யாருக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதை காவல்துறை, உளவுப் பிரிவுடன் ஆலோசித்து முடிவு செய்யும். பாதுகாப்பு கோரி அளிக்கப்படும் கடிதத்தில் இருக்கும் விவரங்கள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K