திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (14:17 IST)

தமிழ்நாட்டு மக்களுக்கு பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது -வைகோ

தமிழ்நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும்  பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ  சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்குப்        பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது:  ''முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுனர் ஆர்.என்.ரவியின் சந்திப்புக்குப் பின்னராவது ஆளுனர் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும்'' என்று கூறினார்.
 
மேலும், ''பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழ் நாட்டை அறிவிக்க வேண்டும். புயல், மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ் நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஓர வஞ்சனை செய்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.