திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 26 ஆகஸ்ட் 2023 (17:25 IST)

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு கமகம விருந்து

vijay makkal iyakkam
நடிகர் விஜய் சமீபத்தில், கல்வி விழா நடத்தினார். அதன்பின்னர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது.

இதையடுத்து, மாணவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இலவச கல்வி பயிலகம் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.  இதையடுத்து, இலவச சட்ட ஆலோசனை மையம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த  நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தின், மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபபெற்ற இக்கூட்டத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்து சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட 1000 பேர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு வந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு  மதிய உணவிற்கு நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்தார்.