திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 10 டிசம்பர் 2024 (11:27 IST)

தி.மு.க. பைல்ஸ்-3 வெளியிடப்படும்.. கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்களும் உண்டு: அண்ணாமலை..!

Annamalai Stalin
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக பைல்ஸ் என இரண்டு கட்டமாக குற்றச்சாட்டுகளை வெளியிட்ட நிலையில், தற்போது மூன்றாம் கட்டமாக "திமுக பைல்ஸ்-3 வெளியிட இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த முறையை திமுக மட்டும் இன்றி திமுக கூட்டணி கட்சிகள் செய்த ஊழல், எடுத்த டெண்டர்கள், மற்றும் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை "கலைஞர் கைவினை திட்டம்" என்று தமிழக அரசு பெயர் மாற்றி அமல்படுத்தி உள்ளது என்றும், இந்த திட்டத்திற்கும் மத்திய அரசிடம் தான் நிதி கேட்டு வருவார்கள் என்றும் அண்ணாமலை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

ஆதிதிராவிடர் துறை சார்பில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத்தரப்படும் நிலையில், இது குல கல்வி இல்லையா என்ற கேள்வி எழுப்பிய அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அமைச்சரை டிசம்பர் 12ஆம் தேதி சந்திக்க உள்ளோம் என்றும் அந்த சந்திப்புக்கு பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் போலீசார் மீது தாக்குதல் தொடர்கிறது என்றும் இது கண்டிக்கத்தக்கது என்றும் அண்ணாமலை கூறினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.



Edited by Siva