தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகல்: டிடிவி தினகரன் அறிவிப்பு
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைந்த 5 மாதங்களுக்கு பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து இருவரும் விலகியுள்ளனர்.
ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோரின் இந்த முடிவு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக- பா.ஜ.க.வின் கூட்டணியை பலத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முக்கிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலகலை அடுத்து ஓபிஎஸ், தினகரன் இருவருமே தவெக கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva