1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 மே 2025 (07:44 IST)

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அதிருப்தி..!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாக பயனர்கள் புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் பயனர்கள் அதிருப்தியுடன் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் சேவை இயல்பாக நடந்து வருவதாகவும், ஏர்டெல் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஏர்டெல் சேவை பாதிப்பு குறித்து சென்னை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவு செய்து வருகின்றனர். தங்கள் செல்போன் மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், இன்டர்நெட் பயன்பாட்டை பயன்படுத்த முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு தொடர்பாக, ஏர்டெல் இணையதளத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் புகார் அளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva