செவ்வாய், 30 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (13:59 IST)

செல்லாக்காசுகள் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: யாரை கூறுகிறார் ஆர்பி உதயகுமார்?

செல்லாக்காசுகள் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது: யாரை கூறுகிறார் ஆர்பி உதயகுமார்?
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார், அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிலர் ஏற்படுத்தி வரும் சலசலப்புகள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
 
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு, தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடி பழனிசாமி உயர்ந்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் மக்களாட்சியை மலர செய்ய அவர் கள போராளியாக உழைத்து வருகிறார்.
 
எடப்பாடி பழனிசாமியின் உழைப்பை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், அ.தி.மு.க.வை அழிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் அனைவரும் தோல்வியைச் சந்தித்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஒற்றுமை என்ற பெயரில் இவர்கள் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால், இந்தச் "செல்லாக் காசுகளின்" சலசலப்புகள் ஒருபோதும் அ.தி.மு.க. தொண்டர்களின் பலத்தை சேதப்படுத்தாது என்றும் ஆர்.பி. உதயகுமார் ஆணித்தரமாக தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran