செவ்வாய், 7 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 ஜூன் 2025 (13:11 IST)

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

premalatha vijaynakanth

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் 2 வேட்பாளர்களுமே அதிமுகவினராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவின் முடிவு என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

 

அதிமுக - தேமுதிக கூட்டணியில் இருந்து வரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். இதனால் அதிமுக - தேமுதிக இடையே புகைச்சல் நிலவி வந்த நிலையில் இன்று மாநிலங்களவை வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. அதில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படவில்லை.

 

இந்நிலையில் அதிமுகவின் இந்த முடிவு குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தபோது “மாநிலங்களவையில் ஒரு சீட் தருவதாக முன்பே பேசியிருந்ததுதான். இதுகுறித்து அவர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தபோது ஆண்டைக் குறிப்பிடவில்லை. அதுபற்றி கேட்டபோது ஆண்டு குறிப்பிடும் வழக்கம் இல்லை. ஆனால் சீட் தருவது உறுதி என்றார்கள். இப்போது 2026ம் ஆண்டு என்று சொல்கிறார்கள்.

 

நாங்கள் வரும் 6 மாதங்களுக்கு கட்சியை மேம்படுத்துவதில் செயல்பட உள்ளோம். தேமுதிக மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த நிலைபாடு அறிவிக்கப்படும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K