வியாழன், 9 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 மே 2025 (09:21 IST)

பாமகவை இரண்டாக உடைத்தது பாஜக தான்.. இன்னும் சில கட்சிகள் உடையும்: பத்திரிகையாளர் மணி

Ramadoss Anbumani Clash
பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக தான் என்றும், கடந்த 2024 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் விரும்பினார். நள்ளிரவு 12 மணி வரைக்கும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென காலையில் பாஜகவுடன் கூட்டணி என அன்புமணி அறிவித்தார். அப்போது தான் முதல்  மோதல் தொடங்கியது.
 
அன்புமணிக்கு பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் அன்றைய தினம் கூட்டணி நடந்தது. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருந்தால், கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்கு குறைந்தது எட்டு தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
 
பிற மாநிலங்களில் மாநில கட்சிகளை உடைக்கும் வேலையை செய்து வந்த பாஜக, தற்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் பாமக என்ற கட்சியை உடைத்துள்ளது என்றும், இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதுமட்டுமின்றி, தங்களுடன் இணையாத இன்னும் சில கட்சிகளையும் பாஜக உடைக்க தயங்காது என்றும், எனவே அரசியல் கட்சிகள் பாஜகவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva