திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (18:15 IST)

மலைகிராம மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸை வழங்கிய நடிகர் பாலா

actor bala
ஈரோடு  மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உள்ளிட்ட 18 மலைகிராம மக்களின் மருத்துவ பணிகளுக்காக நகைச்சுவை நடிகர்  பாலா ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.

இவர் தற்போது சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி உள்ளிட்ட 18 கிராம மக்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டி,  கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் சத்தியமங்கலத்திற்கும்  செல்கின்றனர்.

இதனால் அவசர உதவி காலத்தில் மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக நகைச்சுவை நடிகர் பாலா ரூ. 5 லட்சம் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸ்ஸை தன் சொந்த நிதியில் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பாளர்  ஜவஹர் ஆம்புலன்ஸை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.

நடிகர் பாலாவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.