திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:21 IST)

கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10சதவீதம் போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

st  George port-tamilnadu
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10சதவீதம் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவித்துள்ளது அரசு.

மேலும் போனஸ் திட்டத்தின் கீழ் வராத தலைமை சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் எனவும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.24000 கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளது அரசு.

இதன் மூலம் 44 270 பணியாளர்களுக்கு ரூ.28 கோடியே ஒரு லட்ச ரூபாய் போனஸ் வழங்கப்படும் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.